எங்களின் நோக்கம் — நமது சமூக இளைஞர்கள் சரியான வயதில் திருமணம் செய்வதற்கு உதவுவது
வணக்கம் கொங்கு நாட்டு கவுண்டர் சொந்தங்களே !!!
பருவத்தே பயிர் செய் என்பது பழமொழி. இது மனித குலத்துக்கும் பொருந்தும். வரன் தேடுவதில் ஒவ்வொருவருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும்.
ஓரளவு நமக்கு ஏற்றவகையில் வரனும், குடும்பமும் அமைந்தால் சில எதிர்பார்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகளின் படிப்புக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து திருமண வயதில் திருமணம் முடித்தால் வரப்போகும் தலைமுறைகளையும் சிறப்பாக உருவாக்கிட முடியும்.
நம் நாட்டு கவுண்டர் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு வரனின் சுயவிவரமும் சரிபார்க்கப்பட்டு ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, வேறு எங்கும் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் பொருத்தமான வரனை எளிமையாகவும், சுலபமாகவும் தேர்ந்தெடுக்கும் வகையில் குல கோவில்கள், சங்கங்கள் மற்றும் திருமண மணமாலை குழுக்கள் இணைந்து நம் உறவுப் பெருமக்களுக்காக Jaagai online என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தை சிறப்பாக பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற வரனை தேர்ந்தெடுத்து, திருமண வயதில் திருமணம் முடிக்க Jaagai online குழு அன்புடன் வாழ்த்துகிறது.
